Home சினிமாஆர்யா தங்கி இருந்த விடுதியை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்

ஆர்யா தங்கி இருந்த விடுதியை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்

by admin


தனியார் தொலைக்காட்சி நடத்தும் மணப்பெண் தேடும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ஆர்யா தங்கி இருந்த விடுதியை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடிகர் ஆர்யா தனது மணப்பெண்ணை தேடும் நிகழ்ச்சியாக ‘எங்கள் வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் ஒருவரை ஆர்யா தனது மணப்பெண்ணாக தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகர் ஆர்யா ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் துர்கா மாதர் சங்கத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட் பெண்கள் அந்த விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், நடிகர் ஆர்யா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக கலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றதையடுத்து ஆர்யா, படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More