ஜனாதிபதியின் ஜப்பானுக்கான அரசமுறை விஜயத்தில் ஜனாதிபதியுடன் ஜப்பான் சென்றுள்ள தூதுக்குழுவினருடன் கலபொடஅத்தே ஞானசார தேரரும் இணைந்துள்ளார் எனத் தெரிவித்து தற்போது சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையெனவும் அவை முற்றிலும் பொய்யானவை எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
கலபொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் விஜயத்திற்கு முன்னரே தனிப்பட்ட விஜயமாக ஜப்பான் சென்றுள்ளதுடன், ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்குவசிக்கும் இலங்கையர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் ஜப்பானிலுள்ள பௌத்த விகாரைகளின் தலைமைத் தேரர்களுடன் ஞானசார தேரரும் சமுகமளித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந் நிகழ்வில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில புகைப்படங்களைக் கொண்டு, ஜனாதிபதியோடு சென்றுள்ள தூதுக்குழுவில் கலபொடஅத்தே ஞானசார தேரரும் இடம்பெற்றுள்ளார் என சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ள செய்திகளில் எதுவிதமான உண்மைகளும் இல்லை எனத் தெரிவிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது