குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2026ம் ஆண்டில் வட அமெரிக்க நாடுகளில் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடாத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த கால்பந்தாட்ட போட்டியினை நடாத்துவதற்கு சுமார் 26 நகரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. நியுயோர்க், நியூஜெர்சி, லொஸ் ஏன்ஜல்ஸ், ரொரன்டோ, மெக்ஸிக்கோ உள்ளிட்ட 23 நகரங்கள் போட்டிகளை நடாத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
அதேவேளை வன்கூவர் மற்றும் சிக்காகோ ஆகிய நகரங்கள் ஏற்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கப் போவதில்லை என அறிவித்திருந்தன. மிகச் சிறந்த மைதானங்கள், பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டன காணப்படுவதனால் வடஅமெரிக்காவிற்கு உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என வடஅமெரிக்க நாடுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.