குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் போது காவல்துறையினர்; ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி , மூவரை அழைத்து சென்று பின்னர் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்காது ஏமாற்றி இருந்தனர்.
அதனால் ஆத்திரமுற்றிருந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் , நிகழ்வு முடிந்து வெளியேறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கு எதிராக கடும் கோபத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்தி திட்டி தீர்த்தனர். அதன் போது ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி அழைத்து சென்று ஏமாற்றிய காவல்துறையினரையும் திட்டி தீர்த்தனர்.