குளோபல் தமிழ்pச செய்தியாளர்
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. படையினரால் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ம் ஆம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள அமெரிக்கப் பிரதிநிதி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுவதனை உறுதி செய்யவும் இலங்கை முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் மத வழிபாட்டு உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.