மியான்மார் ஜனாதிபதி ஹிதின் கியா (Htin Kyaw) பதவி விலகியுள்ளதாக அந்டநாட்டு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ள. மியான்மாரில் கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் ஹிதின் கியா ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில் ஹிதின் கியா பதவிவலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி விலகலுக்கான காரணம் குறித்த முழு தகவல் வெளியாகவில்லை. 71 வயதான ஹிதி கியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக அவர் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தநிலையில் உடல்நிலை காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது