162
கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று (21) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ. ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயந்த திஸாநாயக்க, ஆனந்த அழுத்கமகே, மத்திய மாகண சபை உறுப்பினர்களான லாபிர், ஹிதாயத் சத்தார், புதிய பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Spread the love