182
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் தியாகி திலீபனின் நினைவுத் தூபிமுன் இடம்பெற்ற வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
Spread the love