குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐ.நா பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது – சரத் பொன்சேகா..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையானதல்ல என அவர் தெரிவித்துள்ள அவர், நாட்டின் மீது சேறு பூசும் நோக்கில் சில தரப்பினர் யுத்தத்தின் பின்னர் மிகைப்படுத்திய குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சில விதி விலக்குகள் காணப்பட்டாலும், கண்மூடித்தனமாக அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜப்கஸ மற்றும் கோதபாய ராஜபக்ஸவின் நடவடிக்கைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் பூதாகாரமாக உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.