ஊக்க மருந்து பயன்பாட்டை ஒழிப்பது குறித்த ரஸ்யாவின் முனைப்புக்கள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரஸ்ய ஊக்க மருந்து முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், போதியளவு வேகமாக முன்னேற்றத்தை பதிவு செய்யவில்லை எனவும் உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் கிரேக் ரீடி இதனைத் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமானதும் வினைத் திறனானதுமான வகையில் ரஸ்ய ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனம் இயங்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனத் தெரிவித்துள்ளார். ஊக்க மருந்து பயன்பாட்டை ரஸ்யா ஊக்குவிப்பதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ரஸ்யா நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.