நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பாடசாலை மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள அரச மகளிர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியியல் கடந்த பெப்ரவரி மாதம் போகோ ஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் மாணவிகள், பேராசிரியைகள் பலர் காயமடைந்ததுடன் சுமார் 110 மாணவிகள் காணாமல் போயிருந்ததாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட மாணவிகளில் 104 பேர் நைஜீரியாவில் டாப்ஜி நகரில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது
கடந்த 2014ம் ஆண்டு போர்னோ மாநிலத்தில் கடத்தப்பட்ட சில மாணவிகள் இன்னும் தீவரவாதிகளின் பிடியில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.