பிரான்சில் பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். பல்பொருள் அங்காடியினை சுற்றவளைத்த காவல்துறையினர் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களக் காப்பாற்ற முயன்ற போது குறித்த நபர் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறையினரும் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் நீடித்த மோதலின் பின்னரேயே குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்த பல்பொருள் அங்காடியில் கடமையாற்றிய ஊழியர் மற்றும் ஒரு வாடிக்கையாளர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரான்சில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைபிடிப்பு – ஒருவர் பலி
பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் பொதுமக்கள் பலரை பிணைக்கைதிகளாக வைத்துள்ளார் எனவும் அதில் ஒருவர் இறந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை நோக்கி நபரொருவர் சுட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறப்பு காவல்துறை படைகள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது
துப்பாக்கியை வைத்துள்ளவர் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்சிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.