193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லஞ்சம் பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபர் ஒருவருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாத்தளை விஜய வித்தியாலத்தின் அதிபர் களுவாராச்சிகே தயாவதிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தரம் ஒன்றுக்கு மாணவரைச் சேர்ப்பதற்காக 150, 000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டமை நிரூபணமாகியதனைத் தொடர்ந்து இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ம் திகதி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love