குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாய்லாந்தில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்திற்கு ஆதரவான 300க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சிக்கு இராணுவத்தினர் வழங்கி வரும் ஆதரவினை வாபஸ்பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2014 சதிப் புரட்சியொன்றின் மூலம் தற்போதைய அரசாங்கம் தாய்லாந்தில் ஆட்சியை கைப்பற்றியிருந்த நிலையில் மீளவும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.