174
களவாணி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ஓவியா கலகலப்பு திரைப்படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களாக வலம் வந்த சினேகனுக்கு நாயகியாக ஓவியா புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா3’ படத்தில் நடித்து வருகின்றார். அனிதா உதீப் இயக்கத்தில் ‘90எம்.எல்’ என்ற படத்திலும் ஓவியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் ‘களவாணி-2’ படத்தில் விமல் ஜோடியாகவும் நடிக்கிறார்.
இந்த நிலையில், பாடல் ஆசிரியரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவருமான சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சினேகன் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘பனங்காட்டு நரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சினேகன் ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. சினேகன் ஜோடியாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ ஓவியா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
Spread the love