விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் இன்று காலை வழமை போன்று வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது குடோனின் ஒரு பகுதியில் உள்ள பட்டாசு திடீரென வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்துடன் பட்டாசு நெருப்பு நாலாபுறமும் சிதறியதால் ஏனைய இடங்களில் உள்ள பட்டாசுகளும் வெடித்தமையினால் தொழிலாளர்கள் சிலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விருதுநகரில் பட்டாசு குடோன் வெடித்ததில் 2 பேர் பலி…
143
Spread the love