குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதனைத் தவிர வேறு வழி எதுவும் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதிக்கு முன்னதாக பிரதமர் பதவி விலகுவதே மிகவும் பொருத்தமான தீர்மானமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன 2020ம் ஆண்டு வரையில் அரசாங்கத்தை நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால் மட்டுமே அரசாங்கத்தையும், அவரையும், ஜனாதிபதியையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அவசியம் கிடையாது என்ற போதிலும் மத்திய வங்கி பிணை முறி மோசடிகளை தடுக்க சுதந்திரக் கட்சி மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் தடுத்து வந்தார் என டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.