குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க விசேட நீதிமன்றத்தை உடனடியாக ஸ்தாபிக்குமாறும் இல்லையென்றால், சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளுமாறும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இலங்கைக்கு எச்சரித்துள்ளார்.
இந்த சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு 139 ஐரோப்பிய நாடுகளில் செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் போர் குற்றங்களை எதிர்நோக்கும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களை இந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சுகாவே, மனித உரிமை பேரவைக்கு வழங்கியுள்ளார்.
இதன் மூலம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு இந்த எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் அதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.