தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான பிரச்சாகரான 81 வயதாகும் வின்னி மண்டேலா இறந்துவிட்டதாக அவரது தனி உதவியாளர் தெரிவித்துள்ளார் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி இவர். இனவெறிக்கு எதிராக நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து போராடியவர் வின்னி மண்டேலா.
கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது அவருடன் வின்னி மண்டேலா கைகோர்த்து நடந்த புகைப்படம் அப்போது இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக திகழ்ந்தது. எனினும், அதன்பிறகு அவரது புகழ் சட்டபூர்வமாகவும், அரசியல்ரீதியாகவும் வீழ்ச்சியைடையத் தொடங்கியது. வின்னி மண்டேலாவின் இறப்பு குறித்த ஒரு அறிக்கையை அவரது குடும்பத்தினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டேலாவுக்கு 3 மனைவிகள். மண்டேலாவின் முதல் திருமணம் 26 வயதில் நடைபெற்றது. ஈவ்லின் மண்டேலா 1944-ம் ஆண்டு மண்டேலா, ஈவிலின் மேசேயை மணந்தார். இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள். இவர்களில் மூன்று குழந்தைகள் மரணமடைந்துவிட்டனர். 1958-ம் ஆண்டு இருவரும் விவாக ரத்து செய்து கொண்டனர்.
1958-ம் ஆண்டு வின்னியை மணந்தார். வின்னி மண்டேலா நெல்சன் மண்டேலாவை விட 16 வயது இளையவர். அரசியல் நண்பரும் கூட. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. 40 ஆண்டுகாலம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர் 1998-ம் ஆண்டு பிரிந்தனர்.
பின்னர் தனது 80-வது பிறந்த நாளில் மொசாம்பிகா முன்னாள் அதிபரின் விதவை மனைவி கிரேகா மச்சேசலை மண்டேலா 3-வது திருணம் செய்தார்.