Home இலங்கைஎவரும் எண்ணிப்பார்க்காத சக்திகள் நாளைய தினம் பிரதமருடன் இணைந்துக்கொள்ளும்…

எவரும் எண்ணிப்பார்க்காத சக்திகள் நாளைய தினம் பிரதமருடன் இணைந்துக்கொள்ளும்…

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்…


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்க எவரும் எண்ணிப்பார்க்காத சக்திகள் நாளைய தினம் பிரதமருடன் இணைந்துக்கொள்ளும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது 2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை தோற்கடிக்க போவதில்லை. அந்த மக்கள் ஆணையை தோற்கடிக்க முயலும் வாக்கு வங்கி இல்லாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் சகல அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து அதனை வெற்றிக்கொள்வார்கள். சில அரசியல்வாதிகள் பிரதமருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர் எனவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More