0
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று (03.04.18) மாலை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இடையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நாளை (04) நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love