குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களது முகங்கள் சுருங்கிப் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான டொக்டர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதங்கள் பாராளுமன்றில் நடைபெற்று வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டுவிட் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இருண்ட முகத்துடன் ஆசனங்களில் அமர்ந்திருப்பதாக ஹர்ஸ புகைப்படம் ஒன்றையும் ஆதாரமாகக் காட்டி டுவிட் செய்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இலகு வெற்றியீட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்