இலங்கை கடற்படையினர் மற்றும் கடற் கொள்ளையர்கள் நடுக்கடலில் வைத்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று முன்தினம் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள நிலையில் 3 படகுகளில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 7 பேர், நாகூர் மீனவர்களை சுற்றி வளைத்து இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த 2 லட்சம் ரூபா பெறுமதியான மீன்கள், வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை கரை திரும்பிய 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று காரைக்கால் மாவட்டத்திஜனைச் சேர்ந்த 6 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது எல்லை தாண்டி வந்ததாகத் தெரிவித்து இலங்கை கடற்படையினர் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த மீனவர்கள் காரைக்கால் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது