குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றியீட்டியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் பிரான் வில்சன் 45 ஓட்டங்களையும், டெனிலி ஹசேல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில், எஸ் மன்தனா 86 ஓட்டங்களையும் பி.சர்மா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். போட்டியின் ஆட்ட நாயகியாக மன்தனா தெரிவு செய்யப்பட்டார். மூன்று போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது.