150
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு கடந்த நான்கு நாட்களாக மிக சிறப்பாக இடம்பெற்று வரும் ‘யாழ்’ மருத்துவக் கண்காட்சியை இன்று இரவு 10 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்காம் திகதி முதல் இடம்பெற்று வந்த இக் கண்காட்சி இன்று பிற்பகல் ஏழு மணியுடன் முடிவடையும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் பார்வையாளர்கள் தொடர்ந்து வருகை தந்துகொண்டிருப்பதால் இன்று இரவு பத்து மணிவரை கண்காட்சியை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதி சீட்டுக்களை இன்று ஏழு மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Spread the love