குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக ஜப்பானில் கடல் மற்றும் தரை நடவடிக்கைகளுக்கு ஒருங்கே பயிற்றப்பட்ட ஈருடகப் படை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இந்த ஈருடகப் படையணி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீன தாக்குதல்களை நடத்தக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு ஈருடகப் படையணியை ஜப்பான் நிறுவியுள்ளது.
ஜப்பானை சுற்றி நிகழ்ந்து வரும் சம்பவங்கள் காரணமாக நாட்டின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாக அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் டோமோகிரா யமமோடோ ( Tomohiro Yamamoto )தெரிவித்துள்ளார். அதி நவீன வசதிகள் மற்றும் வளங்களுடன் இந்த ஈருடகப் படையணியை ஜப்பான் உருவாக்கியுள்ளது. ஹெலிகொப்டர்கள், கப்பல்கள் உள்ளிட்டனவும் இந்தப் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளது.