ஐபிஎல் கிரிக்கெட்டின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் போது நாயச்சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி களத்தடுப்ப்னை தேர்வு செய்தது. இதையடுத்து துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
இதனையடுத்து 126 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி ஐதராபாத் அணி 15.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதேவேளை நாளை சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிடவுள்ளன.