குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக வாக்களித்த இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு தேவையில்லை எனக் கூறப்பட்டாலும் இவர்களை நாட்டு மக்கள் அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டால், நாம் மேலும் பலமடைவோம். எனவும் மக்களுக்கு எதிர்க்கட்சி தொடர்பில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அரசாங்கம் பதவி வந்த காலத்தில் இருந்து மக்களுக்கு என்ன செய்தது என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம் எனவும் மகி்நத ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். (திவயின)