குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டுமென வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கோரியுள்ளார். அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கல்கள் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் முயற்சிக்காத வரையில் நாடு பெரும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைக்கு தீர்வு காண வேண்டுமாயின் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகள் ஒன்றாக இணைந்து செயற்படுவது போல் தென்பட்டாலும், உண்மையில் வெப்வேறு பாதைகளில் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஓர் அரசியல் விளையாட்டாகவே கருதப்பட வேண்டுமென ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.