குளோபல் தமிழச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற ஆபிரிக்க விளையாட்டு வீரர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளனர். கமரூன், சியரே லியோன், உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுக் கிராமத்தை விட்டு வெளியே சென்ற வீரர்கள் திரும்பி வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கமருனைச் சேர்ந்த 24 வீர வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றதாகவும் இதில் எட்டுப் பேரைக் காணவில்லை எனவும், அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடரின் போதும் சில கமருன் வீரர்கள் தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசியல், பொருளாதார காரணிகளை முன்னிலைப்படுத்தி ஆபிரிக்க விளையாட்டு வீர வீராங்கனைகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.