குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புறம்பேசும் அரசியல்வாதிகள் பற்றி மக்கள் நன்றாக அறிவார்கள் எனவும் இதனால், டிலான் பெரேரா போன்ற கூறும் விடயங்களை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் உள்ள விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
டிலான் பெரேரா கூறும் விடயங்களுக்கு நாங்கள் பதிலளிக்க போவதில்லை. அவர் ஒரு காலத்தில் விஷ போத்தல்களை எடுத்து வந்தார். அவர் நாட்டுக்கு கூறும் பல விடயங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் எனக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் என்ற வகையில் மகிந்த அமரவீரவுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தலைவர் இருக்கின்றார். தலைவரே தீர்மானங்களை எடுப்பார். அவரது தீர்மானங்களை செயலாளர்கள் நாட்டுக்கு கூறுவார்கள்.
அத்துடன் பொது வேட்பாளரை நிறுத்திய கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே ஐக்கிய தேசியக்கட்சியுடன் நான் தொடர்புகளை கொண்டுள்ளேன். எனினும் ஐக்கிய தேசியக்கட்சியுடனோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனோ தனிப்பட்ட தொடர்புகள் எதுவுமில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.