156
குளோபல் தமிழச் செய்தியாளர்
தேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவோம் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். புத்தாண்டு மரபுகளின் அடிப்படையில் அமைச்சில் பணிகளை ஆரம்பித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி, சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி, நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி முன்னோக்கி நகர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அனைத்து அரச பணியாளர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு சிங்களத் தமிழர்களிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒர் சிறந்த பண்டிகையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love