180
பொதுநலவாய உறுப்பு நாடுகளின் கண்டல் தாவரப் பாதுகாப்பு தொடர்பான தலைமைத்துவம் வகிக்கும் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் 25ஆவது அரச தலைவர்கள் மாநாடு இன்று (19) லண்டன் நகரில் ஆரம்பமானதுடன், இன்று பிற்பகல் இடம்பெற்ற அரச தலைவர்களின் பிரதான அமர்வில் இது தொடர்பாக பிரகடனம் செய்யப்பட்டது.
அதற்கேற்ப உலகில் கண்டல் தாவரங்களை பாதுகாத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விடயங்கள் பற்றி கண்டறிதல் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றிற்கான செயற்படுத்துகை குழு இலங்கையின் தலைமையில் பெயரிடப்படவுள்ளது.
Spread the love