அர்செனல் கழகத்தின் முகாமையாளராக 22 வருட காலம் பணியாற்றிய அர்சேன் வெங்கர் இந்த பருவகாலம் நிறைவடைந்தவுடன் முகாமையாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்றான அர்செனல் கழக அணியின் முகாமையாளராக பிரான்சைச் சேர்ந்த அர்சேன் வெங்கர் கடந்த 1996-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் பதவிவகித்து வருகின்றார்.
68 வயதாகும் இவரது தலைமையில் அர்செனல் அணி மூன்று முறை பிரீமியர் லீக் சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியிருந்தது. .அத்துடன் 7 முறை எப்ஏ கிண்ணத்தினையும் , 7 முறை கம்முனிட்டி ஷில்டையும் கைப்பற்றியுள்ளதுடன் 20 வருடமாக தொடர்ந்து சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடி 704 வெற்றிகளை பெற்றுள்ளது.
கடந்த பருவகாலத்தில் அர்செனல் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதனால் அர்சேன் வெங்கர் முகாமையாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்திய போதும் அர்செனல் கழகம் அவரது பதவிக்காலத்தை நீடித்திருந்தது.
எனினும் இந்த பருவகாலத்திலும் அர்செனல் மோசமாக விளையாடி வருகின்றனால் வெங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வெங்கர் இந்த பருவகாலத்துடன் அர்செனல முகாமையாளர்; பதவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.