குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு அஞ்சியே ஜனாதிபதி மைத்திரிபால சிறினே பாராளுமன்றை ஒத்தி வைத்தார் என கூட்டு எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களினால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட இருந்தது எனவும் இதன் காரணமாகவே பாராளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி முன்கூட்டியே ஒத்தி வைத்தார் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு திரட்டப்பட்டதாகவும் கூட்டு எதிர்க்கட்சியிடமும் இது குறித்து உதவி கோரப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல துண்டுகளாக பிளவடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒர் பிரிவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.