மியான்மாரில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் ராணுவத்துக்கும் இடம்பெற்ற மோதலில் உயிருக்குப் பயந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளதாக ஐ.நா. கணக்கிட்டுள்ளது.
அவர்கள் பங்களாதேசின் காக்ஸ் பஸார் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மலைப்பாங்கான குறித்த பகுதியில் உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் திறந்தவெளியில் அவர்கள் பரிதாபமான நிலையில் உள்ளனர்.
பங்களாதேசில் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ளதனால் புயல் காற்று, பலத்த மழை போன்ற நேரங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவும் ஆங்காங்கே நடக்கும். இந்நிலையில் அகதிகள் முகாமில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் பாதுகாப்புக் கேள்விக் குறியாக உள்ளது என காக்ஸ் பஸார் அகதிகள் முகாமின் செயல் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகின்ற ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த ஜோன் மெக்கியூ என்பவர் தெரிவித்துள்ளர்.
உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கு புதிதாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்