குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சவுதி அரேபியா சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ள நிலையில், அரசாங்கம் உலக சந்தையின் போர்வையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதால், மக்கள் மிகவும் பாதிப்பு உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இயந்திர மனிதனை போன்றது. இதயமோ மனதோ கிடையாது.
சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்பர். நகரங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த சமையல் எரிவாயு தற்போது நாடு முழுவதும் வியாபித்துள்ளது. சமையல் எரிவாயு மட்டுமல்ல, அரசாஙகம், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றின் விலைகளையும் அதிகரிக்க முடியும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாவாக இருந்தது. எனினும் தற்போது ஆயிரத்து 676 ரூபாவுக்கு சமையல் எரிவாயு கொள்கலன் விற்பனை செய்யப்படுகிறது.