154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பண்டாரவளை நீதவான் நீதிமன்றின் தகவல் அறையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் காலை வேளையில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. காவல்துறையினரும், தீயனைப்புப் படையினரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பண்டாரவளை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love