Home இலங்கைஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது :

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மேயர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவளித்திருந்தது.இந்த ஆதரவு குறித்து நாமல் ராஜபக்ஸ கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

எனினும், இந்த விமர்சனமானது கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்தவில்லை எனவும் வேறும் பிரச்சினைகள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட ரீதியில் தமது அதிருப்தியை தாம் வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன முன்னணியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More