Home உலகம்சம்பியன்ஸ் லீக் வெற்றியில் எனது எதிர்காலம் தங்கியில்லை

சம்பியன்ஸ் லீக் வெற்றியில் எனது எதிர்காலம் தங்கியில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சம்பியன்ஸ் லீக் வெற்றியில் தமது எதிர்காலம் தங்கியிருக்கவில்லை என ரியல் மட்ரீட் கழகத்தின் பயிற்றுவிப்பாளரும் பிரான்ஸ் அணியின் முன்னாள் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருமான ஜினினின் ஜிதேன் (  Zinedine Zidane ) தெரிவித்துள்ளார்.
சம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையிறுதியில் ரியல் மட்ரீட்கழகம், பாய்ரேன் முனிச் கழகத்தை எதிர்த்தாட உள்ளது.

தாம் பயிற்றுவிக்கும் கழகம் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். போட்டிகளில் வெற்றியீட்டுவதனை முதனிலையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த போட்டிகளில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு எதிர்வரும் போட்டிகளில் ஆடும் வகையில் அணியை வழிநடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More