Home இலங்கை இலங்கையின் பின்னடைவுகளை அமைச்சரவை மாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியாது…

இலங்கையின் பின்னடைவுகளை அமைச்சரவை மாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியாது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

நாட்டின் தற்போதைய அரசாங்கம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை அமைச்சரவை மாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை கட்டியெழுப்ப அமைச்சரவை மாற்றம் அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய வேலைத்திட்டம் அவசியம். இதனால், புதிய வேலைத்திட்டத்துடன் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். நேற்று நடைபெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு செலவுகள் மீதமான போதும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More