யூத மக்களை பற்றியும், யூத இனப்படுகொலை பற்றியும் தான் தெரிவித்த கருத்துகளுக்கு பாலத்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் மன்னிப்பு கோரியுள்ளார் யூத இனப்படுகொலையானது வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடியதொரு குற்றம் என நேற்றையதினம் அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மேற்கு கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய முகமது அப்பாஸ், ஐரோப்பாவில் பெருமளவு யூதர்கள் கொல்லப்பட்டது யூத இன எதிர்ப்பால் இல்லை எனவும் அவர்களின் நிதி செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவு எனவும் தெரிவித்திருந்தார். மேலும் வட்டி, வங்கி போன்றவைகளை யூதர்களின் சமூக செயல்பாடுகளாகவும் அப்பாஸ் விவரித்திருந்தார்.
அப்பாஸ் யூத இனப்படுகொலை பற்றி தெரிவித்த கருத்து, யூதர்களுக்கு எதிரானது என இஸ்ரேலிய அரசியல்வாதிகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கண்டித்திருந்தனர். இந்தநிலையில் யூத மக்களை பற்றியும், யூத இனப்படுகொலை பற்றியும் தான் தெரிவித்த கருத்துகளுக்கு முகமது அப்பாஸ் மன்னிப்பு கோரியுள்ளார்
இரண்டாம் உலகப்போரின்போது, ஐரோப்பாவிலுள்ள யூதர்களை ஒழித்துவிடும் முயற்சியில் ஜெர்மனி நாஜிக்கள், மக்களை பெருங்கூட்டமாக கொன்று குவிக்கும் மரண முகாம்கள் மூலம் சுமார் 60 லட்சம் யூதர்களை கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.