158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் வாரத்தில் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் குறித்த விலைப் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் எதிர்வரும் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தநிலையில் சில காலங்களாக நீக்கப்பட்டிருந்த வரி மீளவும் அறவீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபாவும் வரி விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசல் 10 ரூபாவினாலும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love