இலங்கை பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் மலேசியாவில் கைது..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த 131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் டாங்கர் ரக கப்பலொன்றில் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணத்தை தொடங்கவிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் தென் ஜொஹொர் மாநில கடற்பரப்பில் இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் புகலிடக் கோரிக்கையாளர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், ஐந்து சிறுமியரும், நான்கு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்களை கப்பலுக்கு ஏற்றிச் சென்ற சிறிய ரக படகு ஒன்றையும் மலேசிய காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 127 இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தி ஒன்பது மலேசியர்கள், நான்கு இந்தோனேசியர்கள் மற்றும் நான்கு இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap