குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் ரீதியாக பழிவாங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். பழிவாங்கும் நோக்கிலோ அல்லது குரோத உணர்வின் அடிப்படையிலோ புதிய நீதிமன்றம் குறித்த சட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டமானது காலம் தாழ்த்தப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் போன்று பழிவாங்கல்களை மேற்கொள்ளும் எண்ணங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தலைமைகளின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ளத் தவறியதனால் சிறியானி பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் பழிவாங்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை முழு அளவில் சுயாதீனமாக இயங்கக்கூடிய வகையில் சட்டங்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.