172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கட்டுநாயக்க வானூர்தி நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று காலை தீ பரவியது. இந்நிலையில் தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய தீயணைப்பு பிரிவு மற்றும் விமான படை தீயணைப்பு பிரிவு ஆகியன இணைந்து தீயணைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க வானூர்தி நிலைய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love