Home இந்தியாவிஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்த இங்கிலாந்து நீதிமன்றம்

விஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்த இங்கிலாந்து நீதிமன்றம்

by admin


உலகம் முழுவதும்உள்ள தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவையை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்த வெண்டுமும் என கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் 10 ஆயிரம் கோடி ரூபா நிலுவையை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து உயர்நீதிமன்றின் வணிக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தன. ந்தநிலையில் விஜய் மல்லையா உலகம் முழுவதும் தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். எனினும் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தார்.

இதனால், இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளில் இருந்து கடன் நிலுவையை வசூலிக்கும் அதிகாரம் இந்திய வங்கிகளுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More