பிரதான செய்திகள் விளையாட்டு

மட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி – சிமோனா – கிவிடோவா மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெற்று வருகின்ற மட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியின் போது உலகின் முதல்தர வீராங்கனையான ருமேனியாவினைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் பெல்ஜியம் வீராங்கனை எலிசே மெர்டென்ஸ்சுடன் போட்டியிட்டிருந்தார். இந்தநிலையில் சிமோனா 6-0, 6-3 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் எலிசே மெர்டென்ஸ்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில செக்குடியரசு வீராங்கனை பெற்றா  கிவிடோவா(Petra Kvitova )  6-3, 7-6 (10-8) என்ற நேர்செட்டில் புயர்டோரிகோ வீராங்கனை மோனிகா புய்க்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap