நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம், இந்திய மத்திய அரசுக்கும் கர்நாடாகாவினைச் ஜெம் நிறுவனத்துக்கும் இடையே உருவான ஒப்பந்த அடிப்படையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றன.
எனினும்;, பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்காதநிலையில் நெடுவாசலுக்கு பதில் வேறு இடம் ஒதுக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சிடம் ஜெம் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, விரைவில் மத்திய அரசு வேறு இடத்தை ஒதுக்கினால், நெடுவாசலில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் கைவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பொதுமக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த பெரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்ததிட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது