குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை மக்கள் கோருகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உறுதியானதும் துரித கதியிலுமானதுமான தீர்வுத் திட்டங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கிய பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோருவதாகவும் தமிழ் மக்கள் சமவுரிமையுடைய பிரஜைகளாக வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். சுயமரியாதை, நீதி உறுதிப்படுத்தப்படலுடன் கௌரவமாக வாழ்வதற்கே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனை மறுக்க வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தமக்கு தென்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமைகளை எவராலும் புதைத்துவிட முடியாது எனவும் வரலாற்று ரீதியாக இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருவாகவும் சில பகுதிகளிலும் இன்னமும் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்படாமையே அனைத்துப் பிரச்சினைகளுக்கமான பிரதான காரணி எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
2 comments
அவர் பேசியவற்றை மறைப்பின்றி முழுமையாகக் கொடுத்தால் என்ன ஐயாக்கள்? இன்னும் ஏமாற்றுத்தானா?
இவரா மக்களா கோருவது?